பான் இந்தியா நட்சத்திரம் Prabhas நடிப்பில் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான தி ராஜா சாப் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

People Media Factory தயாரிப்பில், இயக்குநர் Maruthi இயக்கிய இந்த திரைப்படத்தில் Malavika Mohanan, Nidhhi Agerwal, Riddhi Kumar ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Samuthirakani உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளது Thaman S.

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு படம் முழுமையாக ஏற்பாகவில்லை என்ற கலவையான விமர்சனங்கள் வெளியானது. அதே நேரத்தில், உலகளாவிய அளவில் இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை Jio Hotstar நிறுவனம் ரூ.80 கோடி மதிப்பில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் மற்றும் பிரபாஸ் ரசிகர்களிடையே, இந்த ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.