தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம் – 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தினசரி 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தால், முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் சேதமடைந்தன. அதேசமயம், நான்காவது மற்றும் ஐந்தாவது யூனிட்டுகள் பராமரிப்பு பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால், மூன்றாவது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த யூனிட்டும் பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக, அனல்மின் நிலையத்தின் அனைத்து 5 யூனிட்டுகளும் ஒரே நேரத்தில் செயலிழந்துள்ளன. இதனால் மொத்தம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.