சென்னை: இன்றைக்கு யுபிஐ அவசியமாகிவிட்டது, ஏனெனில் பணம் அனுப்பவும் பெறவும் வங்கி செல்லாமல் உடனடியாக மொபைல் மூலமே செய்ய முடிகிறது. சிறிய செலவுகளிலிருந்து பெரிய பரிவர்த்தனை வரை எளிதாகிறது… அதுமட்டுமல்ல, பாதுகாப்பு, டைம் மிச்சப்படுத்துதல் போன்றவற்றுக்கும் யுபிஐ அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. சிலசமயம் தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால் அதனை திரும்ப பெற முடியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலத்தில் பணம் அனுப்புவதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. செல்போன் இருந்தாலே போதும். கூகுள் பே, போன் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன.
யுபிஐ அவசியம் டீக்கடையில் டீ வாங்குவதிலிருந்து, வீட்டு வாடகை, கடன் தவணை, முதலீடு வரை எல்லாமே யுபிஐ மூலமே நடக்கிறது. ஆனால் இந்த எளிமை சில நேரங்களில் பெரிய பிரச்சனையையும் உண்டாக்குகிறது. குறிப்பாக அவசரத்தில் பணம் அனுப்பும் போது, தவறான செல்போன் எண், தவறான யுபிஐ ஐடி அல்லது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக டைப் செய்துவிட்டால், 100 ரூபாய் 1000 ரூபாய் ஆகி விடும். இப்படி தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது? அந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? என்பதையே இங்கே எளிய வார்த்தையில் பார்க்கலாம். முதலில் ஒரு முக்கிய விஷயம் UPI மூலம் ஒருமுறை பணம் அனுப்பிவிட்டால், அதை உடனடியாக “reverse” செய்ய முடியாது. பணம் நேரடியாக எதிர் நபரின் வங்கி கணக்கிற்கே போய்விடும். அதனால் தான் பணம் அனுப்பும் முன், யுபிஐ ஐடி, செல்போன் எண், பெயர் போன்றவற்றை 2 முறை சரிபார்ப்பது மிகவும் அவசியம்… QR கோடு ஸ்கேன் செய்யும் போதும், காட்டப்படும் பெயரை ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது.