சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையடுத்து, மின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை அமலில் இருக்கும். பராமரிப்பு பணி முன்கூட்டியே முடிந்தால், மின் விநியோகம் அதற்குள் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மின்சார வசதிகள் இடையூறு இல்லாமல் செயல்படவும், பாதுகாப்பு பணிகளை மேம்படுத்தவும் இந்த பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அதன்படி, மாங்காடு மண்டலத்தில் நாளை மின் தடை அமலாகும். இதில் எஸ்.எஸ். கோவில் தெரு, உ.பி. கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலந்தீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி மற்றும் நியூ காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் நேரத்தில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணி முடிந்தவுடன் எந்தவித தாமதமுமின்றி மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மின்சார வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள், மின்விநியோகத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தவும், எதிர்காலத்தில் மின்தடைச் சம்பவங்களைத் தவிர்க்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற பராமரிப்பு பணிகள் கட்டத்தட்ட நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.