குவைத் சிட்டி:
மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த 28ஆம் தேதி அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் மற்றும் இஸ்லாமிய புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மத்திய கிழக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பெரிதும் பதற்றமடையச் செய்துள்ளது. ஈரான் தரப்பும் தாக்குதலை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் பின்னர், பிராந்திய நாடுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அணு மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளதால், இந்த தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மோதல் விரிவடைந்தால் மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச சமூகம் அமைதிக்கான அழைப்பை விடுத்தாலும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. இந்த தாக்குதலின் விளைவுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.