செங்கோட்டையன் சின்னம் மாற்றி வாக்கு கேட்டு சர்ச்சை!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் தொகுதியில் தவெக வேட்பாளர் தமிழ் செல்வியை ஆதரித்து பிரச்சாரத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்ட சம்பவம் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசில் சின்னத்தில் வாக்கு கேட்க வேண்டிய இடத்தில் வழக்கமான அதிமுக சின்னத்தை சொல்லி சொதப்பல் செய்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய செங்கோட்டையன், புரட்சிக்கு தளபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார். உடனடியாக சமாளிக்க முயன்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்க பழகிவிட்டேன் என சிரித்துக்கொண்டு தப்பித்தார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
விஜய் கோடிக்கணக்கான செலவில் விசில் சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்த முயலும் நிலையில், அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன் இச்சொதப்பல் செய்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழக வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. பலமுறை வெற்றி பெற்ற கோபிசெட்டிபாளையில் போட்டியிட்ட அனுபவம் மக்கள் நினைவில் இரட்டை இலை சின்னத்தை பதித்திருக்கிறது.
தவெக தலைவர்கள் சமீப காலங்களில் சொதப்பல்கள் செய்து வருகின்றனர். தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை 13 தொகுதிகளில் திமுகவே வெல்வதாகக் கூறி சர்ச்சை. திருத்தணி வேட்பாளர் சத்தியகுமார் 2034 தொகுதிகளில் வெற்றி என சொல்லி ட்ரோல் ஆனார். இத்தகைய சம்பவங்கள் தவெக பிரச்சாரத்தை பாதிக்கிறது.
ஈரோடு பவானி சாகர் தொகுதியில் தவெக தீவிர பிரச்சாரம். செங்கோட்டையன் முக்கிய பங்காற்றுகிறார். விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் தொடர்கின்றனர். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தவர் இப்போது தவெக விசில் சின்னத்தில் போராடுகிறார். சொதப்பல் தவிர்க்க மேலும் பயிற்சி தேவென குரல்கள் எழுந்துள்ளன.