திருப்பூர்: ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூபாய் முப்பது ஆயிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பெருமாநல்லூரில் நேற்று பிரச்சாரம் செய்தபோது இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

தவெக தேர்தல் வாக்குறுதி புத்தகம் ஏப்ரல் பதினாறாவது தேதி வெளியிடப்படும் என விஜய் தெரிவித்தார். அதற்கு முன்னதாக நெசவாளர்களுக்கான முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்ய அரசு சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள் மற்றும் ஷோரூம்கள் அமைக்கப்படும்.
கைத்தறி, நிலையற்ற நூல்விலை, மின்சார நெருக்கடியைப் பகிர்ந்து கொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு வங்கிகளின் மூலம் ரூபாய் முப்பது ஆயிரம் வழங்கப்படும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் ஐநூறு யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் ஒரு ஆயிரம் ஐநூறு யூனிடுகளாக உயர்த்தப்படும்.
நெசவாளர்கள் வாங்கும் ரசாயனம், சாயங்களுக்கு ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூபாய் பத்து லட்சம் ஆயுள் காப்பீடு அளிக்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூபாய் மூன்று ஆயிரமாக உயர்த்தப்படும்.
விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நூறு சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். இந்நிறுவனங்களை நவீனப்படுத்தவும் உலக அளவில் போட்டியிடவும் முப்பத்தைந்து சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும்.
ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஐம்பது சதவீத பயிர்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.
நெல் குவிண்டாலுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் ஐநூறு, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் நாறாயிரம் ஐநூறு வழங்கப்படும். உழவர்கள் தோழன் திட்டத்தின்படி விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூபாய் பத்து ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும்.
ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் உள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும். அனைத்து அரசு ஊழியர்களின் பணியிட மாற்றங்கள் வெளிப்படையான மற்றும் காலவரையறைக்கு உள்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.
காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூபாய் பதினெட்டு ஆயிரம் இரண்டு முதல் ரூபாய் இருபத்தைந்து ஆயிரமாக உயர்த்தப்படும். அதிகமான அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூபாய் ஒரு ஆயிரம் வழங்கப்படும். காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும். அதிகபணி கொண்ட காவலர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறையில் விடுமுறை அளிக்கப்படும். பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறைகள், நடமாடும் கழிவறைகள் அமைக்கப்படும்.