“உங்க விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க” – கையெடுத்து கும்பிட்டு கேட்ட விஜய்

சென்னை:
தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற Tamilaga Vettri Kazhagam செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் Vijay உரையாற்றினார்.

அப்போது அவர், “இது சாதாரண தேர்தல் இல்லை, மாற்றத்திற்கான தேர்தல். மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “மாற்றி மாற்றி வாக்களிப்பது மாற்றமல்ல. புதிதாக ஒருவரை கொண்டு வருவதுதான் உண்மையான மாற்றம். இந்த தேர்தலில் இரண்டு முனைப் போட்டிதான் உள்ளது. ஒன்று தவெக, மற்றொன்று திமுக” என கூறினார்.

வாக்காளர்களை நோக்கி உணர்ச்சிபூர்வமாக பேசிய விஜய், “உங்க வீட்டிலிருக்கும் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா எல்லாரையும் அழைத்து விசில் சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லுங்கள். ஏப்ரல் 23 அன்று குடும்பம் குடும்பமாக வந்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, கையெடுத்து கும்பிட்டு பேசிய அவர், “தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க… தமிழ்நாடு ஜெயிக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.

விஜய்யின் இந்த உணர்ச்சி மிகுந்த பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.