பிரசாரம் ஓய்ந்தது... கடைசி நாளில் தலைவர்கள் எங்கெங்கு இறுதி பரப்புரை செய்தனர்?

சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த 39 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடைசி நாளில் முக்கிய அரசியல் தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர இறுதி பரப்புரையில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மாலை 6 மணிக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியும் நேரடியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ வாக்கு கேட்க அனுமதி இல்லை. இதனால் தலைவர்கள் அனைவரும் இறுதி நேர பிரசாரத்தை முடித்தனர்.

M. K. Stalin

  • காலை 7 மணி – சோழிங்கநல்லூர்
  • காலை 10 மணி – வேளச்சேரி
  • பிற்பகல் 3 மணி – கொளத்தூர் (சொந்த தொகுதி)

Edappadi K. Palaniswami

  • காலை 10 மணி – சேலம்
  • பிற்பகல் 2 மணி – தருமபுரி (அதிமுக கூட்டணி ஆதரவு பிரசாரம்)

Vijay

  • காலை 10 மணி – சோழிங்கநல்லூர்
  • பிற்பகல் 2 மணி – சைதாப்பேட்டை

Anbumani Ramadoss

  • காலை 9 மணி – சேலம்
  • பிற்பகல் 2 மணி – தருமபுரி (சவுமியா அன்புமணி ஆதரவு)

Seeman

  • காலை 9 மணி – காரைக்குடி
  • காலை 10 மணி – ஐந்து விளக்கு பகுதி
  • காலை 11 மணி – பழைய பேருந்து நிலையம் பகுதி
  • பிற்பகல் 3 மணி – பாண்டியன் திரையரங்கம் அருகில்

இவ்வாறு அனைத்து முக்கிய தலைவர்களும் கடைசி நாளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இனி தேர்தல் களம் வாக்குப்பதிவுக்கு தயாராகியுள்ளது.