6 நாள் சிம்லா சுற்றுப் பயணம்: ஜனாதிபதி முர்மு வந்தடைந்தார்
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் ஏப்ரல் 27 முதல் மே 2 வரை கோடைக்கால சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இதையொட்டி அவர் இன்று காலை சிம்லா வந்தடைந்தார்.

அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகூ, ஆளுநர் கவிந்தர் குப்தா, அமைச்சர்கள் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். சிம்லாவில் உள்ள மஷோப்ரா ராஷ்டிரபதி நிவாஸில் தங்குகிறார் முர்மு.
பயண நிகழ்ச்சி விவரங்கள்:
-
ஏப்ரல் 28: சிம்லா லோக் பவனில் ஆளுநர் ஏற்பாட்டில் விருந்து.
-
ஏப்ரல் 29: அடல் சுரங்கப் பாதையைப் பார்வையிட்டு பயணம்.
-
ஏப்ரல் 30: பாலம்பூர் சௌத்ரி சர்வான் குமார் கிருஷி விஸ்வவிட்யாலய பட்டமளிப்பு விழா, ராஷ்டிரபதி நிவாஸில் அட் ஹோம் வரவேற்பு.
ஜனாதிபதி வருகைக்கு முன் சிம்லாவில் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 3 பிரிவுகளாகப் பிரித்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சுற்றுப் பயணம் இமாச்சல் பிரதேசத்தின் வளர்ச்சி, கல்வி, சுற்றுலா துறைகளை முன்னிறுத்தி நடைபெறுகிறது. ஜனாதிபதி முர்முவின் வருகை மாநிலத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.