தரமற்ற கேன் குடிநீர் விற்பனைக்கு ரூ.5,000 அபராதம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழக சுகாதாரத்துறை குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை வெயிலில் கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், தரமற்ற நீர் விற்பனைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

கேன் குடிநீரில் நிறுவனப் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதித் தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கட்டாயமாக இடம்பெற வேண்டும். இந்த விதிகளை மீறி தகவல்கள் இல்லாமல் அல்லது தரமற்ற குடிநீர் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

குடிநீர் கேன்கள் 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. சூரிய ஒளியில் நீண்ட நேரம் வைக்க தடை. தாதுப் பொருட்கள் அளவு வரம்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்படுவோருக்கு சட்டநடவடிக்கை.

சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் வழங்கல் துறை இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றன. பாசி பிடித்த, அசுத்தமான கேன்கள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம்.

குடிநீர் தரத்தை மாதம் தோறும் ஆய்வக சோதனை செய்ய வேண்டும். நச்சு யிரிகள், கதிர்வீச்சு துகள்கள் இருந்தால் நீர்ஆதாரம் தடை செய்யப்படும்.

இந்த உத்தரவு பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. தரமற்ற குடிநீர் விற்பனையைத் தடுக்க கடும் கண்காணிப்பு நடத்தப்படும்.