தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் சர்வதேச கார் பந்தய போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் அஜித்குமார், ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த வாழ்த்து பதிவு அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் #HappyBirthdayAjith என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.