சென்னை: தனிப்பெரும் கட்சியாக வென்றும் ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியில் தவெக தலைவர் விஜய் தடுமாறுகிறார். ஆளுநர் அர்லேகரை இரண்டு முறை சந்தித்தும் பெரும்பான்மை நிரூபணம் கோரி உரிமையை மறுத்து விஜய்யை அழைக்கவில்லை.

நேற்று இரவு விஜய் ஜான் ஆரோக்கியசாமி, புச்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராய் உள்ளிட்ட தலைவர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். விரக்தியின் உச்சத்தில் “பாஜக, திமுக, அதிமுக சேர்ந்து சதி செய்கிறார்கள்” என கோபமுற்று பேசினார்.

விஜய் கூறினார், “ஆட்சி அமைக்க முயற்சி செய்ய வேண்டாம். யாரால் ஆட்சி அமைக்க முடியுமோ அவர்கள் அமைக்கட்டும். கவர்னர் ஆட்சி வேண்டுமானால் வரட்டும், மறு தேர்தல் வேண்டுமானால் நடத்தட்டும். தைரியம் இருந்தால் மறு தேர்தல் நடத்தி பார்க்கலாம்.”

ஸ்டாலினை கடுமையாக சாடி, “ஜனநாயகம் என்று வாய்கிழிய பேசுபவர் கவர்னர் நடவடிக்கையை கேள்வி கேட்டதா? விஜய்க்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்று அவசரமாக பேட்டி கொடுக்கிறார். மாட்டோம் என்றால் செய்வோம் என்று அர்த்தம். இது திமுக கலாச்சாரம்” என வெளிப்படுத்தினார்.

தலைவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆதவ் அர்ஜுனா “அரசியலில் நம்பிக்கைக்கு இடமில்லை” என சொல்ல, அருண்ராய் குறுக்கிட்டு, “விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரிக்க தயாராக இருந்தனர். ஸ்டாலின் அவர்களை சந்தித்ததும் மனம் மாறியது. நேரடியாக சந்தித்தபோது இதை ஓப்பனாக சொன்னனர்” என தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகையில், “கவர்னர் திருப்தி அடைந்தால் பதவிப்பிரமாணம் செய்யலாம். ஆனால் நம்பிக்கை, திருப்தி என்ற வார்த்தைகளால் விளையாடுகிறார்கள்” என விஜய் ஆதங்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட்கள், விசிக ஆதரவு தாமதமாகியுள்ளது. “இருந்தாலும் அவர்கள் முடிவு உறுதியாகலாம்” என அருண்ராய் சமாதானப்படுத்தினார். ஆனால் விஜய் “இனி முயற்சி வீண், மக்களிடம் நீதி கேட்போம்” என உறுதியாகக் கூறினார்.

தலைவர்கள் “சட்டரீதியாக முயற்சிப்போம், எதிரிகள் அடுத்த நகர்வை பார்க்கலாம்” என சமாதானப்படுத்தினர். ஆனால் விஜய் விரக்தி மூடத்தில் தான் இருந்ததாக தவெக தகவல்கள் தெரிவிக்கின்றன.