சென்னை: அதிமுக பிளவில் எடப்பாடியின் எதிர்காலம் ஜேசிடி பிரபாகர் கையில்!

சென்னை: அதிமுகவில் புதிய பிளவு உருவாகியுள்ளது. எடப்பாடி கே பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலம் சபாநாயகராக தேர்வு செய்யப்படும் ஜேசிடி பிரபாகர் கையில் இருக்கிறது. தற்போது 17 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாகவும், 30 எம்எல்ஏக்கள் எஸ் பி வேலுமணிக்கு ஆதரவாகவும் பிரிந்து நிற்கின்றனர். இதனால் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் வேகமாக உருவாகியுள்ளது.

சட்டமன்ற அதிமுக தலைவராக யாரை அங்கீகரிக்க வேண்டும் என்பது சபாநாயகரின் தீர்ப்பு மீதே சார்ந்துள்ளது. எடப்பாடியின் தலைமையை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் ஜேசிடி பிரபாகரிடம் உள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர், ரவிசங்கர் போட்டியிட்டனர். எதிர்த்தவர்கள் இல்லாததால் போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாளை பரபரப்பு உச்சத்தில் இருக்கும். சட்டப்பேரவையில் தனது அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தலைமையிலான தவெக தயாராகிறது. சபாநாயகரைத் தவிர்த்து பார்த்தால் தவெகவின் பலம் 106. திமுக தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விஜய்க்கு 120 ஆதரவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக பிளவால் அதன் வாக்குகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பாக பிரிந்துள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒவ்வொரு எம்எல்ஏயும் தனி தனியாக வாக்களிக்கிறார். ஆனால் அவர்கள் சார்ந்த கட்சி கொறடாவின் உத்தரவுக்கு அடங்க வேண்டும். கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அந்த எம்எல்ஏ பதவி பறிபோகும்.

அதிமுகவில் பிளவு எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி ஆதரவு 17 எம்எல்ஏக்கள் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியை தேர்வு செய்ததாக மனு அளித்துள்ளனர். வேலுமணி ஆதரவு 30 எம்எல்ஏக்கள் வேலுமணியை தேர்வு செய்ததாக மனு கொடுத்துள்ளனர். கொறடாவாக சி வி விஜயபாஸ்கரை நியமித்துள்ளதாக சிவகாசிமணி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை சபாநாயகர் எந்த அணிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறாரோ அந்த அணியின் தலைவர் சட்டமன்ற குழு தலைவராக அங்கீகரிக்கப்படுவார். அந்த அணியின் கொறடா மட்டுமே செயல்பட முடியும்.

வேலுமணியை சபாநாயகர் அங்கீகரித்தால் எடப்பாடிக்கு கேம் முடிவு. வேலுமணி அணியின் கொறடா விஜய்க்கு ஆதரவாக வாக்கெடுப்பு உத்தரவு இத்தால், எடப்பாடி 17 எம்எல்ஏக்களும் அதை ஏற்க வேண்டும். மாறாக செய்தால் பதவி பறிபோகும். இதனால் சண்முகம் தரப்பு அரசியல் நகர்வுகளை செய்து எடப்பாடிக்கு செக் வைத்துள்ளது.

எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் ஜேசிடி பிரபாகர் கையில். நம்பிக்கை வாக்கெடுப்பு பல சம்பவங்களை ஏற்படுத்தலாம். அதிமுக மீண்டும் உடையுமா என கேள்வி எழுந்துள்ளது.