
மகளிர் பிரீமியர் லீக் WPL 2027 தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது சீசன் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும் என BCCI அறிவித்துள்ளது.
இந்த சீசனுக்கான வீராங்கனைகள் retention செய்யும் கடைசி நாள் செப்டம்பர் 28, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28, 2026 அன்று கொச்சியில் உள்ள Grand Hyatt-ல் WPL player auction நடைபெற உள்ளது.
Mumbai Indians, Royal Challengers Bengaluru, Delhi Capitals, Gujarat Giants மற்றும் UP Warriorz ஆகிய ஐந்து அணிகள் மீண்டும் கோப்பைக்காக களம் காணவுள்ளன. முழுமையான match-by-match fixtures மற்றும் venues குறித்த விரிவான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.