கேரள போலீசின் K9 பிரிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய Labrador Samantha அதிகாரப்பூர்வ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது. போலீஸ் பதிவுகளில் K9-286 என அறியப்படும் Samantha, பத்தனம்திட்டா மாவட்ட போலீசில் பல தேடுதல் மற்றும் anti-narcotics நடவடிக்கைகளில் பங்கேற்றது.

Samantha தனது சேவைக்காலத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தேகத்துக்குரிய இடங்கள் மற்றும் courier centres உள்ளிட்ட பல இடங்களில் நடந்த போதைப்பொருள் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டது. Excise Department நடவடிக்கையொன்றில் 25 கிலோ கஞ்சாவை கண்டுபிடிக்க உதவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஓய்வு பெற்ற Samantha-வை shelter-க்கு அனுப்பாமல், அதன் தற்போதைய handler George Antony தத்தெடுத்து தனது வீட்டிலேயே பராமரிக்க முன்வந்துள்ளார். பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு Samantha அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள போலீஸ் K9 பிரிவில் பணிபுரியும் நாய்களின் செயல்பாட்டு சேவை பொதுவாக சுமார் 10 வயதில் முடிவடைகிறது. ஓய்வுக்குப் பிறகு handler தத்தெடுக்கலாம்; இல்லையெனில் ஓய்வு பெற்ற போலீஸ் நாய்களுக்கான பராமரிப்பு மையத்தில் அவை பராமரிக்கப்படுகின்றன.