நியூயார்க்:
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீத் (38) என்பவர், 2017 ஆம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இந்த கொலை வழக்கில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் போது, நசீர் ஹமீது இந்தியாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் பதுங்கி இருக்கும் அவரைப் பற்றிய தகுந்த தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.45 லட்சம் (50,000 டாலர்) வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.