ராமேசுவரம்: 10 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் வலையில் டன் கணக்கில் காரல் மீன்கள் சிக்கின.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழக மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் 10 நாட்கள் மீன்பிடிக்கு தடையிருந்த நிலையில், பாக் நீரிணை கடற்பகுதியில் வானிலை சீரானதைத் தொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 429 விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்றன. இதில், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்று, வியாழக்கிழமை காலை கரை திரும்பினர்.