சென்னை,
ஹெபா படேல், திரிகுன், அகில் ராஜ், சிரி ஹன்மந்த், பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹாரர் படம் ‘இஷா’. இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் மன்னே இயக்கி வருகிறார். எச்விஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பொட்டுலா ஹேமா வெங்கடேஸ்வர ராவ் தயாரிக்கிறார். இசை அமைப்பை ஆர்.ஆர். துருவன் மேற்கொண்டுள்ளார்.
‘இஷா’ படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்குமுன், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், அது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.