சென்னை: ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி. இது அஜித்குமாரின் 64வது படமாகும்.

கார் பந்தய வீரரான அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அந்த போட்டி முடிந்ததும் அவர் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அஜித்தின் கார் பந்தய பயணம் ஆவணப்படமாக உருவாகும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆவணப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஏ. எல். விஜய் இயக்கத்தில் அஜித் ‘கிரீடம்’ படத்தில் முன்னதாக நடித்திருந்தார்.