சென்னை: காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.