இன்றைய பஞ்சாங்கம் – 21 டிசம்பர் 2025, ஞாயிறு
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மார்கழி – நாள் 6
நட்சத்திரம்: அதிகாலை 2.16 வரை மூலம், பின்னர் பூராடம்
திதி: காலை 9.33 வரை பிரதமை, பின்னர் துவிதியை
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 7.45–8.45, மாலை 3.15–4.15
ராகு காலம்: மாலை 4.30–6.00
எமகண்டம்: மதியம் 12.00–1.30
குளிகை: மாலை 3.00–4.30
கௌரி நல்ல நேரம்: காலை 10.45–11.45, பிற்பகல் 1.30–2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்
இன்றைய ராசிபலன்
மேஷம்: உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்பு. அக்கம் பக்கத்தினருடன் அளவோடு பழகுவது நல்லது. உத்யோகத்தில் சிக்கல்கள் இருந்தாலும் அனுசரிப்பது நலம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
ரிஷபம்: வெளியூர் டிரான்ஸ்பர் வாய்ப்பு. நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவீர்கள். பதவி உயர்வு செய்திகள் வரும். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மிதுனம்: சந்திராஷ்டமம் காரணமாக பயணங்களை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. இறைவனை பிரார்த்திப்பது நலம். அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கடகம்: ரியல் எஸ்டேட் துறையில் லாபம். தொழிலில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
சிம்மம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு தொடர்பான சிக்கல்கள் நீங்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். பங்குத் தொகை வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி: நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
துலாம்: புதுமண தம்பதிகள் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் வெளிநாட்டு கல்வி திட்டமிடுவர். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவர். புதிய தொழில் துவங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்: விற்க முடியாத நிலத்திற்கு வாடிக்கையாளர்கள் வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகள். உடல் நலம் மேம்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு: அலுவலக சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி. வெளியூரில் இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். வியாபாரம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மகரம்: புதிய வருமான வாய்ப்பு. கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். புரமோஷன், டிரான்ஸ்பர் வாய்ப்பு. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்: பழைய கடன்கள் அடைபடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய கிளைகள் திறக்கும். நிலம் வாங்கும் ஆசை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மீனம்: மகன் மகளுக்கு நல்ல திருமண வாய்ப்பு. மாணவர்கள் முயற்சியால் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். குடும்ப வழக்கு சமரசமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு