பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்: அன்புமணி பேச்சு
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியில், Edappadi K. Palaniswami உடன் இணைந்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் Anbumani Ramadoss கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, Premalatha Vijayakanth நமது கூட்டணிக்காகவே செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “Desiya Murpokku Dravida Kazhagam கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். அந்தக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.
மேலும், தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, அதிமுகவின் நல்லாட்சியை கொண்டு வர வேண்டும் என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் குற்றம்சாட்டினார்.
“திமுகவின் தோல்விகள், துரோகங்கள், மோசடிகள் உலக வரைபடத்தை விட நீளமானவை” என கடுமையாக விமர்சித்த அவர், தாய்மார்கள், பெண்கள், பெற்றோர்கள் யாரும் திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தபால் வாக்குகளில் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.