மக்கள் கஷ்டங்களை மட்டுமே உயர்த்திய ஆட்சி இது: விஜய் கடும் தாக்கு
சென்னை:
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் Vijay கடுமையாக திமுக அரசை விமர்சித்தார். “இது சாதாரண தேர்தல் அல்ல… மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போகும் கடைசி பிரசாரம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “எத்தனை பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி, விலைவாசி அனைத்தையும் உயர்த்திவிட்டார்கள். குப்பைக்கும் வரி போட்டுவிட்டார்கள். மக்களின் வாழ்க்கையை உயர்த்தவில்லை… மக்களின் கஷ்டங்களை மட்டுமே உயர்த்தியுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் சுமை உயர்ந்துள்ளதாகவும், அந்த பணத்தில் இளைஞர்களின் கல்விக்கடனை ரத்து செய்திருக்கலாம் என்றும் விஜய் கூறினார்.
மேலும், “அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற எங்கள் நிலைப்பாட்டில் ஒரு இஞ்ச் கூட மாறவில்லை. மதசார்பற்ற சமூகநீதி தான் எங்கள் கொள்கை. இந்த விஷயத்தில் என்னை 100 சதவீதம் நம்பலாம்” என தெரிவித்தார்.
ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என எல்லா மதத்தினருக்கும் தானொரு மனிதராக இருப்பேன் என்றும், “எம்மதமும் நம்மதம் என்பதே உண்மையின் முகம்… அதுதான் விஜயின் முகம்” என்று அவர் கூறினார்.
இறுதியாக, “ஒரு பக்கம் கதர் வேஷம், மறுபக்கம் காவி வேஷம் போட்டு அரசியல் நடத்துபவர்களை மக்கள் அறிந்திருக்கிறார்கள்” என விமர்சித்தார்.