AI நிறுவனமான Anthropic, செயற்கை நுண்ணறிவு agents நேரடியாக physical devices மற்றும் scientific instruments-ஐ இயக்க உதவும் புதிய Model Hardware Standard (MHS) framework-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது research preview நிலையில் உள்ள இந்த standard, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் advanced manufacturing சூழல்களில் AI automation-ஐ விரிவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

MHS மூலம் AI agents microscopes, liquid handlers, robotic arms மற்றும் பிற programmable laboratory அல்லது manufacturing equipment போன்ற பல சாதனங்களை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக drug discovery experiments நடத்துவது முதல் quantum computer-ல் laser calibration செய்வது வரை சிக்கலான பணிகளில் AI agents பயன்படுத்தப்படலாம் என Anthropic தெரிவித்துள்ளது.

தற்போது பல ஆய்வகங்களிலும் தொழிற்சாலைகளிலும் வெவ்வேறு hardware devices ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள தனித்தனி integrations உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். MHS இந்த integration காலத்தை மணிநேரங்கள் அல்லது சில நிமிடங்களாகக் குறைக்க முடியும் என்று Anthropic கூறுகிறது.

AI agent ஒரு experiment-ன் ஒவ்வொரு கட்டத்தையும் reason செய்து, தேவையான parameters-ஐ real time-ல் மாற்றுவதுடன், சில hardware errors ஏற்பட்டாலும் மனித உதவி இல்லாமல் recover செய்யக்கூடிய autonomous workflows உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இதனால் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய automated research systems உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த standard எந்த ஒரு குறிப்பிட்ட robot அல்லது Anthropic model-க்கும் மட்டும் கட்டுப்பட்டதல்ல; programmable hardware-களுடன் பொதுவான interface உருவாக்குவதே அதன் நோக்கம். Anthropic தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட research labs மற்றும் manufacturing partners உடன் MHS-ஐ சோதித்து வருகிறது. Safety evaluation முடிந்த பின்னர் framework-ஐ open source செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் AI agents browser, coding மற்றும் digital workflows-ஐ தாண்டி, real-world machines-ஐ இயக்கும் “physical AI” காலத்திற்கான முக்கிய அடித்தளமாக MHS மாறக்கூடும் என technology துறையில் பார்க்கப்படுகிறது.