2025-ல் திருமணம் செய்த தமிழ் நடிகர், நடிகைகள்

சென்னை,

2025ம் ஆண்டு நிறைவுக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் தமிழ் சினிமா உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், 2025ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர், நடிகைகள் குறித்து பார்ப்போம்.

சமந்தா பிரபல நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை தனது இரண்டாவது திருமணமாக ஏற்றுக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ம் தேதி ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

பார்வதி நாயர் பிப்ரவரி 10ம் தேதி நடிகை பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சாக்சி அகர்வால் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்சி அகர்வால், ஜனவரி 2ம் தேதி நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

கிஷன் தாஸ் “முதலும் நீ முடிவும் நீ” படத்தில் நடித்த கிஷன் தாஸ், தனது தோழி சுச்சித்ராவை ஜனவரி 31ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சம்யுக்தா பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தாவை கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் செய்து கொண்டார்.

அபிநயா “நாடோடிகள்” பட நடிகை அபிநயா, தன்னைப் போல மாற்றுத்திறனாளியான வேகேசன் கார்த்திக் என்பவரை ஏப்ரல் 16ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார்.

பாவனி ரெட்டி பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக போட்டியாளரான அமீரை ஏப்ரல் 20ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் “பசங்க” பட நடிகர் ஸ்ரீராம், தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை ஜூன் மாத இறுதியில் மணமுடித்தார்.

மவுனிகா சின்னத்திரை நடிகர் சந்தோஷும் நடிகை மவுனிகாவும் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

மொத்தத்தில், 2025ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். இவர்களின் திருமணங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன.