சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை: விரைவில் நடக்கிறது”,”recipient”:””}
சென்னை: இன்னும் இரண்டு மாதங்களில், சென்னையில் ஏர் டாக்ஸி (All-electric VTOL – vertical take-off and landing) சோதனை நடைபெற உள்ளது. இபிளேன் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய விமானங்களின் உற்பத்தி பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் சோதனை நடத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் கூறியதாவது, இறுதிக்கட்ட பணிகளை தற்போது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட சோதனை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவுள்ள ஐடிஎஸ் செயற்கைக்கோள் வளாகத்தில் நடைபெறும்.
அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வேறு இடத்தில் பறக்கும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிஜிசிஏ அனுமதியுடன் ஒரு விமான பாதை உருவாக்கப்பட்டு உள்ளது.
ஏர் ஆம்புலன்ஸ்களுக்கு 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அனுமதி வழங்கப்பட உள்ளதற்காக, அதே ஆண்டின் இறுதிக்குள் ஏர் டாக்ஸி மற்றும் ஏர் சரக்கு சேவை விமானங்களுக்கும் ஒப்புதல் பெறப்படும்.
நிறுவனம், தற்போது விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதேவேளையில் ஏர் டாக்ஸி மற்றும் ஏர் ஆம்புலன்ஸ்களின் பயன்பாட்டுக்கான ஆப்பரேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போதைய ஹெலிகாப்டர் கட்டணங்கள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை உள்ள நிலையில், ஏர் ஆம்புலன்ஸ்களின் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை குறைவாக இருக்கும்.
இப்போதைய நிலையில் ஆண்டுக்கு 100 விமான உற்பத்தியை மேற்கொள்ள பங்குதாரர்களை தேடி வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 900 முதல் 1,000 வரை உயர முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.