
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரி சுமைகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் தினசரி எரிபொருள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து காணப்பட்டாலும், உள்நாட்டு சந்தையில் உடனடி தாக்கம் ஏற்படாமல் நிலையான விலை நீடித்து வருகிறது. எதிர்காலத்தில் உலக சந்தை நிலவரத்தை பொருத்து விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு பெட்ரோல், டீசல் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், தினசரி விலை நிலவரம் மீது கவனம் அதிகரித்துள்ளது.