அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளன. அமெரிக்கப் படைத்தளங்களை இலக்கு வைத்து, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
மோதலின் பின்னணி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா ஹூசேன் காமேனி பொறுப்பேற்றார். இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹர்முஸ் ஜலசந்தி விவகாரம் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இன்றைய தாக்குதல் கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.