காரைக்கால்:

காரைக்காலில் தேசிய நெடுஞ் சாலையில் மீண்டும் பேட்ச் ஓர்க் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.57 கோடி மதிப்பிலான மேம் பாட்டுப் பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே எழுந்துள் ளது.

சென்னை- நாகை இடையே யான தேசிய நெடுஞ்சாலை காரைக்கால் மாவட்டத்தில் பூவம் நண்டலாறு முதல் வாஞ் சூர் வரை அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிக கனரக வாகன போக்குவரத்து மற்றும் பருவ மழை சூழலால் அடிக்கடி சேத மடைந்து, விபத்துகள் நேரிடு வதும், அவ்வப்போது தற்காலிக மாக பேட்ச் ஒர்க் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சாலையை ரூ.50 கோடியில் மேம்படுத்தும் பணி டிசம்பரில் தொடங்கும் என கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் கே.லட்சுமி நாரா யணன் அறிவித்த நிலை யில், இதுவரை பணி தொடங்கப்படவில்லை
இதற்கிடையே, அண்மை யில் பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் சேதமடைந் துள்ள இந்த சாலையில் பூவம் பகுதியில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால், இந்த சாலையை நிரந்தரமாக மேம்படுத்தும் பணி தொடங்குவது எப்போது என்ற கேள்வியை பொதுமக்கள், சமூக களிடம் கேட்டபோது, “பூவம் நண்டலாறு முதல் வாஞ்சூர் வரை யுள்ள 21.6 கி.மீ. தொலைவு சாலையை ரூ.57 கோடியில் மம்படுத்த திட்ட மதிப்பீடு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பு தல் கிடைத்ததும். அரசாணை, டெண்டர் உள்ளிட்ட நடைமுறை களுக்கு பிறகு பிப்ரவரி இறுதியில் பணிகள் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சீரமைப்பு பணி.

ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து காரைக்கால்

மக்கள் போராட்டக்குழு உறுப்பினர் பி.ஜி.சோமு ‘ கூறியபோது, “இந்த சாலையை சீரமைக்க ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரியில் பணி தொடங்கும் என்றும் கடந்த மாதம் அதி காரிகள் தெரிவித்த நிலையில், தற்போது பேட்ச் ஓர்க்
பணி தொடங்கியுள்ளது. அவ்வப்போதுபேட்ச்ஓர்க்மட்டும் செய்யப்படும் இந்த சாலை யில் விரைவாகவே ஜல்லிகள் பெயர்ந்து, விபத்துகள் நேரிடுகின்றன. எனவே. சாலையை புதிதாக அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, பொதுப் பணித் துறை அதிகாரி

இதில், 10 இடங்களில் ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள், காரைக்கால் நகரப் பகுதியில் அலங்கார மின் விளக்கு, 3 இடங்களில் கல்வெர்ட்டுகளை அகலப்படுத்தி புதிதாக அமைப்பது, மாவட்ட எல்லை முகப்பு பகுதிகளில் சிறிது தொலைவுக்கு சாலையோரங் களில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பது. கீழகாசாகுடியில் இருந்து காரைக்கால் மதகடி வரையிலும், திருப்பட்டினத்தி லும் வடிகால் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சாலையில் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ள சில இடங்களில் மட்டும் தற்காலிக அடிப்படையில் தற்போது சீரமைப்பு பணி நடைபெறுகிறது” என்றனர்.