
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதி திமுகவின் முக்கிய கோட்டையாக கருதப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தேர்தல் களத்தின் எதிர்பாராத திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமைகள் மாறக்கூடும். எனினும், தற்போதைய முன்னிலை நிலவரங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.