கொண்டத்தூர்: விவசாயிகளுக்கு PGS இயற்கை விவசாய சான்றிதழ் பயிற்சி
மயிலாடுதுறை, டிச.28:
செம்பனார்கோவில் வட்டாரம், கொண்டத்தூர் கிராமத்தில் ATMA திட்டத்தின் கீழ் PGS இயற்கை விவசாய சான்றிதழ் நடைமுறை பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஆர். செந்தில்குமார் தலைமையில் நடந்த பயிற்சியை வட்டார உதவி விதை அலுவலர் சிவக்குமார் நடத்தினார். சான்றிதழ் பெறும் வழிமுறைகள், நடைமுறைகள் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள்:
– என்.எம். வேளாண் பல்கலைக்கழக மாணவன் ச.சஞ்சித் (ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி).
– தொழில்நுட்ப பயிற்சி வட்டாரக் கல்லூரி மேலாளர் தியாகு.
– தொழில்நுட்ப மேலாளர்கள்.
ஏற்பாடுகளை ATMA திட்ட பரணிகுமார் செய்திருந்தார். பல விவசாயிகள் கலந்துகொண்டு இயற்கை விவசாய முறைகளைப் பயின்றனர்.