வாஷிங்டன்:
அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த 19 நாடுகள்: ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடார், எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா.
டிரம்ப் நிர்வாகம் இந்தத் தடையை அமல்படுத்தி, சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.