பஞ்சுருளி கோலா நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி பங்கேற்பு

மங்களூரு,

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படங்கள் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படங்களை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கர்நாடக துளு இன மக்களால் வணங்கப்படும் பஞ்சுருளி தெய்வத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் நடைபெற்ற பஞ்சுருளி கோலா நிகழ்ச்சியில் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தெய்வப் பாத்திரம் தரித்த நபர் மேடையில் ரிஷப் ஷெட்டியை அழைத்து, “நீ கண்ணீர் விட வேண்டாம்… நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று ஆசீர்வாதம் வழங்கினார்.