சென்னை: சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள “மன சங்கர வர பிரசாத் கரு” படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் “மீசால பில்லா” இணையத்தில் பெரும் வைரலானது. தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.
“சசிரேகா” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக, பாடலின் புரோமோ ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கிய “மன சங்கர வர பிரசாத் கரு” படம் அடுத்தாண்டு பொங்கல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் கீழ் சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.