சென்னை: கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவ. 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி: குமரிக் கடல் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது, இது மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ., 21) கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

  • கடலூர்

  • மயிலாடுதுறை

  • திருவாரூர்

  • நாகை

  • ராமநாதபுரம்

  • விருதுநகர்

  • தென்காசி

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

நாளை மறுநாள் (நவ., 22) கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

  • கடலூர்

  • மயிலாடுதுறை

  • திருவாரூர்

  • நாகை

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • சிவகங்கை

  • ராமநாதபுரம்

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

நவம்பர் 23ம் தேதி கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

  • கடலூர்

  • மயிலாடுதுறை

  • திருவாரூர்

  • நாகை

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • சிவகங்கை

  • ராமநாதபுரம்

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.