டெல்லி: இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் பொறியியல் பட்டதாரிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போன்ற வெள்ளைக்கலர் தொழிலாளர்களை விட, பிளம்பர்கள், மின்னியல் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற நீலக்கலர் தொழிலாளர்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படகிறது. இதனால் இந்தத் தொழிலாளர்களின் ஊதியம் தொடங்கி தேவை வரை எல்லாமே அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

கனடாவைச் சேர்ந்த ‘பைன்ட்ரீ’ என்ற பொருளாதாரப் போக்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான ரித்தேஷ் ஜெயின், உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகி வரும் மாற்றங்கள் குறித்து தனது லிங்க்ட்இன் பதிவில் மிகத் துல்லியமாகத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்ந்த நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பிறப்பு விகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளவில் அறுபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு Mau ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், உலக மக்கள் தொகையில்றுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களின் மக்கள் தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான மாற்று விகிதத்திற்கும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளிலேயே வாழ்கின்றனர். அதாவது ஒரு நாடு தங்கள் மக்கள் தொகையை அப்படியே வைத்திருக்க அந்நாட்டின் தம்பதிகளின் பிறப்பு விகிதம் ஐரொண்டிலைன் பாயிண்ட் ஒன் ஆக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நாடுகளில் பிறப்பு விகிதம் இதை விடக் குறைவாகவே இருக்கிறது.

இருபத்தி மூன்றாம் ஆண்டின் தரவுவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள முக்கால்வாசி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றன. ஜெர்மனியில் இருபத்தி நான்காம் ஆண்டில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான முதலாளிகள் ஆள் சேர்ப்பதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிளம்பர்கள், மின்னியல் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற நீலக்கலர் தொழிலாளர்களுக்குத் தான் தேவை அதிகமாக இருக்கிறது.

உலகில் வெள்ளைக்கலர் ஊழியர்கள் அதிகமாகவும், நீலக்கலர் தொழிலாளர்கள் மிகக் குறைவாகவும் உள்ளனர் என்று குறிப்பிடும் ரித்தேஷ் ஜெயின், இந்த மக்கள் தொகை வீழ்ச்சியை ஈடு செய்யப் பணக்கார நாடுகள் இந்திய நீலக்கலர் தொழிலாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அழைத்து வரத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சில ஆண்டுகளில் பல லட்சம் பிளம்பர்கள் மற்றும் மின்னியல் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தொழில் துறை கணிப்புகள் எச்சரிக்கின்றன.

இதனால், திறமையான இந்தியத் தொழிலாளர்களைக் கவர வளர்ந்த நாடுகள் வேக விசா போன்ற தூண்டில்களை வீசத் தொடங்கியுள்ளன. ரித்தேஷ் ஜெயின் மேலும் கூறுகையில், “இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிளம்பர்கள், மின்னியல் தொழிலாளர்கள், தச்சர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்குப் பயங்கர தட்டுப்பாடு ஏற்படும். ஏனென்றால், இங்கிருக்கும் திறமையான தொழிலாளர்கள் அனைவரும் அதிக ஊதியம் தேடி வளர்ந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து விடுவார்கள்” என்றார்.

ஆனால், சர்வதேச சந்தைக்கு எது தேவையோ அந்த மனிதவளத்தை நாம் உற்பத்தி செய்வதில்லை என்பதே பெரும் விபரீதம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் பட்டதாரி இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட நாற்பது சதவீதமாக உச்சத்தில் உள்ளது. இது படிக்காத அல்லது குறைந்த கல்வித்தகுதி கொண்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

அதாவது கல்லூரியை விட்டு வெளியேறும் பட்டதாரிகளில் பதினான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே தங்களின் முதல் வருடத்தில் நிரந்தரமான ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கோடிக்கணக்கான நீலக்கலர் வேலைகள் உருவாகப் போகின்றன. ஆனால், அதற்கேற்ற முறையான தொழில்நுட்பத் திறன் நம் நாட்டு இளைஞர்களிடம் இல்லை. இந்த வேலைகளைச் செய்ய அடுத்த தலைமுறை இளைஞர்கள் செய்யத் தயங்குகின்றனர்.