தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் அந்த தொகுதியில் கடும் போட்டியை வெளிப்படுத்துகின்றன.

கடந்த ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் கணக்கிடப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக கணக்கிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலம் முழுவதும் பல முக்கிய வேட்பாளர்கள் கடும் போட்டியை சந்தித்து வருவதால், ஒவ்வொரு தொகுதியின் நிலவரமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமைகள் மாறக்கூடும். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.