தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்கள் அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், தவெக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 74 இடங்களிலும், திமுக 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இந்த நிலையில், திமுக தலைமையிலான அரசில் இருந்த மு.க. ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்றிருப்பது இந்த தேர்தலின் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. நகர்ப்புற வாக்காளர்களின் மனநிலை மாற்றம் இந்த முடிவுகளில் பிரதிபலிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், இது இன்னும் ஆரம்ப கட்ட முன்னிலை மட்டுமே என்பதால் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமைகள் மாறக்கூடும். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் பரபரப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.