உலக தலைவர்கள், பிரபலங்களின் அதிரடி செயல்கள் மற்றும் எதிர்வினைகள்
ஜனவரி 15, 2025 – இங்கிலாந்து: பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியில், லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்த துலிப் சித்திக் (வயது 42) பதவியில் இருந்து விலகினார். வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மருமகளான அவர், அந்நாட்டில் நடந்து வரும் நிதி மோசடி விசாரணையில் சேர்க்கப்பட்டதால், பதவி விலகியுள்ளார்.
ஜனவரி 22, 2025 – அமெரிக்கா: உக்ரைன் போருக்கான பேச்சுவார்த்தை குறித்து புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “ஜெலன்ஸ்கியுடன் பேசிவருகிறோம்; புதினுடனும் விரைவில் பேச உள்ளோம்” என தெரிவித்தார். புதின் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால், ரஷியாவுக்கு கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
ஜனவரி 30, 2025 – தென்ஆப்பிரிக்கா: முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் டுடுஜைல் ஜுமா-சம்புத்லா, 2021-ம் ஆண்டு நடந்த வன்முறையில் சமூக வலைதளங்களில் தூண்டுதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்த வன்முறைக்கு தொடர்பாக, சம்புத்லா பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 7, 2025 – சுவீடன்: இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியாவுக்கு நான்காவது குழந்தை பிறந்தது. இதனால் சுவீடன் அரச குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
பிப்ரவரி 13, 2025 – அமெரிக்கா: துளசி கப்பார்டு, அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிப்ரவரி 19, 2025 – பிரேசில்: முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, தற்போதைய அதிபர் லூலா டா சில்வாவுக்கு விஷம் கொடுக்கவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸை கொல்லவும் சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மார்ச் 31, 2025 – அமெரிக்கா: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். “போர் நீடிப்பது ரஷியாவின் தவறு” என அவர் NBC News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஏப்ரல் 1, 2025 – அமெரிக்கா: டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி அரேபியாவை தேர்ந்தெடுத்துள்ளார். அந்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
ஏப்ரல் 7, 2025 – இந்தியா: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா பயணத்தில், முதலீட்டு மற்றும் நிதி ஒத்துழைப்புக்கான 13-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
ஏப்ரல் 14, 2025 – அமெரிக்கா: 79 வயதான ஜனாதிபதி டிரம்ப், உடல்நல பரிசோதனையில் “முழுமையாக தகுதி வாய்ந்தவர்” என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
மே 2, 2025 – கூகுள்: சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டு 8.27 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.67.8 கோடி) செலவிடப்பட்டதாக ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 21, 2025 – அமெரிக்கா: 175 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் “கோல்டன் டோம்” எனும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மே 22, 2025 – தென்ஆப்பிரிக்கா: ஜனாதிபதி சிரில் ராமபோசா, அமெரிக்க பயணத்தில் எலான் மஸ்க் நிறுவனங்களுடன் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கிறார்.