சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநில அரசியல்வாதிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடன் எஸ்ஐஆர் (SIR) பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
6.16 கோடி படிவங்கள் விநியோகம்
6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன.
அவற்றை கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2.45 லட்சம் பணியாளர்கள் பணியில்
மாநிலம் முழுவதும் 68,647 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உட்பட
2.45 லட்சம் பேர் SIR பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒரு கட்சி மட்டுமே படிவங்கள் சேகரிக்கிறது” – குற்றச்சாட்டு பொய்யானது
எல்லா தரப்பினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
எந்த ஒரு கட்சி மட்டும் படிவங்களை சேகரிக்கிறது என்பது தவறான குற்றச்சாட்டு என அவர் தெளிவுபடுத்தினார்.
ஒவ்வொருவரும் பட்டியலில் இடம்பெற வேண்டும்
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
வரைவு பட்டியல் வெளியானபின் இடம் பெறாதவர்கள் சேர்க்கப்பட உரிய அவகாசம் வழங்கப்படும்.
ஆன்லைனிலும் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
படிவங்கள் நிராகரிக்கப்படமாட்டாது
படிவங்களில் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது.
யாருடைய பெயரும் காரணமின்றி நீக்கப்பட முடியாது; நீக்கம் செய்யப்பட்டாலோ
காரணம் நிச்சயமாக தெரிவிக்கப்படும்.இறந்தோர், இடம் பெயர்ந்தோர், படிவம் திரும்பக் கொடுக்காதோர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

