தீயசக்தி திமுக... உங்களின் ஒற்றை தேர்வு விசில் சின்னம்: தவெக தலைவர் விஜய்
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை மக்கள் விரோத தீயசக்தி என கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் மக்களின் ஒரே தேர்வு “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பணம் மற்றும் அதிகாரத்தால் மக்களை ஏமாற்ற முயலும் அரசியல் சக்திகளுக்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள் என்றும், ஏப்ரல் 23 அன்று குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.