சென்னை: Vishal Krishna நடிப்பில் உருவாகி வரும் Magudam திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், படத்தில் இடம்பெறும் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் (Get-up) படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
‘மகுடம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக Dushara Vijayan நடித்துள்ள நிலையில், Anjali முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். படத்திற்கு G. V. Prakash Kumar இசையமைத்துள்ளார்.
முதலில் இயக்குநர் Ravi Arasu இயக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படம், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து விஷாலின் இயக்கத்தில் தொடரப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை கடந்த தீபாவளியன்று வெளியிட்டிருந்தார்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவும், ‘ரைஸ் ஆப் லிங்கா’ என்ற முதல் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.
- 3 கெட்-அப்களில் வீடியோ வெளியிட்ட விஷால்.
- துஷாரா விஜயன் கதாநாயகி; அஞ்சலி முக்கிய வேடம்.
- ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பு.
- ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.