சென்னை,

உலகப் புகழ்பெற்ற பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் நெட்ப்ளிக்ஸ் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய, பெரும்பகுதி தொகையை நேரடியாக பணமாக வழங்கத் தயார் என நெட்ப்ளிக்ஸ் முன்மொழிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இறுதியாக இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள், டிஸ்கவரி சேனல், HBO Max ஸ்ட்ரீமிங் சேவை உள்ளிட்ட அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும். இது ஸ்ட்ரீமிங் துறையில் கடும் போட்டி நிலவும் சூழலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.