பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது பிங்க் பந்து டெஸ்ட் நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 76.2 ஓவர்கள் நீடித்து 334 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 138 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணிக்கு மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் பெற்றார்.

முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் வெதரால்ட் களமிறங்கினர். இருவரும் நிலைத்துடன்ப் விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். இதில் ஹெட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய லபுசேன் சிறப்பாக ஆடி இன்னிங்சை முன்னெடுத்தார். வெதரால்ட் மற்றும் லபுசேன் இருவரும் அரைசதமடித்து ஆஸ்திரேலியாவை வலுவான நிலையில் வைத்தனர். வெதரால்ட் 72 ரன்களிலும், லபுசேன் 65 ரன்களிலும் வெளியேறினர்.

அதன்பின் ஸ்டீவ் ஸ்மித் அரைசதமடித்து 61 ரன்களிலும் ஆட்டமிழந்தார். கிரீன் 45 ரன்கள் எடுத்தார்.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டிற்கு 378 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலையில் வலுப்பெற்ற நிலையில் உள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடன், மைக்கேல் நெசர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.