அரசுபர்வைஅரசுபர்வைஅரசு பார்வை
  • Home
  • இந்தியா செய்திகள்

    பஞ்சாபில் சோகம்: கணவரை இழந்த பெண் தனது 3 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை.

    • July 3, 2026

    இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: நீலகிரி மக்கள் பீதி!

    • June 17, 2026

    இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி புதிய உச்சம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    • June 17, 2026

    “சாக்கடையில் இருக்க வேண்டியது…” கரப்பான் பூச்சி கட்சி என பவன் கல்யாண் கடும் விமர்சனம்!

    • June 15, 2026
    Popular Tags:
    tamilnadu,Political news,india,BreakingNewsTamil,Breaking News
    See All
  • தொழில்நுட்பம்
    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    • January 23, 2026
    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    • January 23, 2026

    முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

    • November 13, 2025

    அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

    • September 8, 2022
    Popular Tags:
    Lifestyle,Ajithkumar,UPI,IT,Ambani
    See All
  • உலக செய்திகள்

    எத்தியோப்பியாவில் கோர விபத்து.. பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு!

    • June 15, 2026

    அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது.. இஸ்ரேல் திட்டவட்டம்!

    • June 15, 2026

    அமெரிக்காவில் ஸ்கை டைவிங் விமானம் விபத்து.. 12 பேர் பலி!

    • June 15, 2026

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்… ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழும் எலான் மஸ்க்!

    • June 15, 2026
    Popular Tags:
    World news,Breaking News,அமெரிக்கா,ஈரான்,Business News
    See All
  • தமிழ்நாடு செய்திகள்

    ஒப்பந்த முறையைக் கைவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பக் கோரிக்கை!

    • August 18, 2026

    வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

    • August 18, 2026

    பௌத்தர்கள் புனிதப் பயண மானியம்: விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தகவல்.

    • August 18, 2026

    போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

    • August 18, 2026
    Popular Tags:
    TamilNaduNews,TamilNaduGovernment,TNGovernment,SocialJustice,ChennaiWeather
    See All
  • விளையாட்டு

    துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன்.. உலகக் கோப்பையில் கோல் மழை!

    • June 15, 2026

    கடைசி நிமிட கோல் கைகொடுத்தது.. ஈகுவடாரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஐவரிகோஸ்ட்!

    • June 15, 2026

    ஷெட்ஜின் அரைசதம் அசத்தல்.. இலங்கை-ஏ அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த இந்தியா-ஏ!

    • June 15, 2026

    நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

    • June 15, 2026
    Popular Tags:
    Sports News,Cricket News,அமெரிக்கா,விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட்
    See All
  • தேர்தல் களம்

திரு.வி.க.நகர்–ராயபுரத்தில் ரூ.2.76 கோடி திட்டங்கள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு

  • March 5, 2026
  • மித்ரா
  • 0
    • தமிழ்நாடு செய்திகள்

சென்னை:

சென்னையில் திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு திட்டப்பணிகள் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திரு.வி.க.நகர் மண்டலத்தின் வார்டு 64-இல் உள்ள சீனிவாசா நகரில் செயல்படும் சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் பார்வையிட்டார். மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி சூழல் கிடைக்கும் வகையில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வார்டு 68-இல் உள்ள ஜவஹர் நகரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி கூடத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் வார்டு 70-இல் உள்ள ரமணா நகர், கவுதமபுரம் பகுதியில் பல்நோக்கு மையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் நியாய விலை கடைகளின் இறுதிக்கட்ட பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியின் வார்டு 71-இல் உள்ள புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் நடைபாதை, கழிப்பறை வசதி, பாதுகாவலர் அறை, கேஜிபோ, திறந்தவெளி உடற்பயிற்சி பகுதி, சிறுவர்கள் விளையாடும் பகுதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏறும் விளையாட்டு, ஊஞ்சல், குடை ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனுடன் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய Street Workout, Forearm Twirl, Chest Press, Shoulder Twirl, Cross Trainer, Core Twister, Leg Press, Pedaling Bicycle போன்ற திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் ராயபுரம் மண்டலத்தில் உள்ள வார்டு 58-இல் ராட்லர் தெருவில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதி மூலம் 595 சதுர அடி பரப்பளவில் இந்த பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் பயிற்சி மையத்தில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான வசதிகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெற்று தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
 
 
 
 
Tags: ChennaiCity, ChennaiCorporation, ChennaiDevelopment, ChennaiNews, ChennaiUpdates, DMKGovernment, InfrastructureDevelopment, PKSekarbabu, PublicFacilities, PublicProjects, Royapuram, TamilNaduGovernment, TamilNaduNews, TVKNagar, UrbanDevelopment
மித்ரா

நாங்குநேரி இரட்டைக் கொலை: பழிவாங்கல் காரணமாக 7 பேர் கைது
ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: மோடி ஏன் கண்டனம் இல்லை? – மு.வீரபாண்டியன் கேள்வி

Leave a Reply Cancel Reply

Latest

இந்தியா செய்திகள்

இந்திய மின்துறையில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

  • March 19, 2026
இந்தியா செய்திகள்

இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: நீலகிரி மக்கள் பீதி!

  • June 17, 2026
இந்தியா செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறை: ஆண்கள் படையை வழிநடத்தும் பெண் அதிகாரி

  • January 21, 2026
இந்தியா செய்திகள்

அரியானாவில் அதிர்ச்சி: வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்து கொலை

  • February 18, 2026
இந்தியா செய்திகள்

ராகுல் மீண்டும் பொய்யை பரப்புகிறார்: மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

  • February 12, 2026

Follow Us

Recent Posts

லைகா–விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று பெஞ்சில் விசாரணைக்குப் பதிவுத் துறைக்கு உத்தரவு

  • November 14, 2025

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

  • November 21, 2025

“ஹரிஷ் கல்யாண் – ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் லுக் வெளியீடு!”

  • November 22, 2025

“அஜித்துடன் எடுத்த ஒரு செல்பி… ஆனந்தக் கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை!”

  • December 4, 2025

நடிகர் தர்ஷன் கொலை வழக்கு: வரும் 17ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடக்கம்

  • December 5, 2025

ஹெபா படேல் நடிப்பில் ‘இஷா’ ஹாரர் படம் – கிளிம்ப்ஸ் வெளியீடு

  • December 5, 2025

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறதா நெட்பிளிக்ஸ்?

  • December 5, 2025

“நீ அழ வேண்டாம்… நான் இருக்கிறேன்!” – ரிஷப் ஷெட்டிக்கு பஞ்சுருளி ஆசீர்வாதம்

  • December 6, 2025

“அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படம்: இயக்கம் ஏ.எல். விஜயா?”

  • December 6, 2025

“பெரிய கூட்டமே வேல செய்கிறது: இயக்குநர் மோகன் ஜி”

  • December 6, 2025

Categories

  • Blog (7)
  • Uncategorized (2)
  • அரசியல் (241)
  • ஆரோக்கியம் / சுகாதாரம் (20)
  • ஆன்மிகம் (22)
  • இந்தியா செய்திகள் (183)
  • உலக செய்திகள் (174)
  • கல்வி / வேலைவாய்ப்பு (6)
  • சினிமா / பொழுதுபோக்கு (192)
  • தமிழ்நாடு செய்திகள் (3,885)
  • தொழில்நுட்பம் (7)
  • வணிகம் / பொருளாதாரம் (17)
  • விளையாட்டு (202)
தமிழ்நாடு செய்திகள்

ஒப்பந்த முறையைக் கைவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பக் கோரிக்கை!

தமிழ்நாடு செய்திகள்

வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு செய்திகள்

பௌத்தர்கள் புனிதப் பயண மானியம்: விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தகவல்.

தமிழ்நாடு செய்திகள்

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

தமிழ்நாடு செய்திகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை – தலைமைச் செயலகத்தில் பார்வை!

Related Posts

வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

பல ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை – தலைமைச் செயலகத்தில் பார்வை!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

அரசுப் பெண் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்: 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு!

  • August 18, 2026
  • 2
  • 0
  • 0

பௌத்தர்கள் புனிதப் பயண மானியம்: விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தகவல்.

  • August 18, 2026
  • 6
  • 0
  • 0

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் மோசடி: ஓய்வு பெற்ற பெண் மருத்துவரின் ரூ.98 லட்சத்தைச் சுருட்டிய மர்ம நபர்கள்.

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

உணவு மற்றும் குடிநீரின்றி தவிக்கும் வனவிலங்குகள்: முதுமலையில் 3 யானைகள் மரணம்!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

  • August 18, 2026
  • 2
  • 0
  • 0

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: மடத்துக்குளத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

வறுமையின் பிடியில் மறைமலை அடிகள் குடும்பம்: இறுதிச்சடங்கை நடத்த உதவ வேண்டுதல்.

  • August 13, 2026
  • 3
  • 0
  • 0

Created by Arasu Parvai. Powered by Inclick. © 2026

  • தேர்தல் களம்
  • தமிழ்நாடு செய்திகள்
  • கல்வி / வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • வணிகம் / பொருளாதாரம்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம் / சுகாதாரம்
  • உலக செய்திகள்
  • இந்தியா செய்திகள்
  • சினிமா / பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அரசியல்
×Close