அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதன்படி, பா.ஜ.க.க்கு 27 தொகுதிகள், பா.ம.க.க்கு 18 தொகுதிகள், அ.ம.மு.க.க்கு 11 தொகுதிகள், த.மா.கா.க்கு 5 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், சிங்க தமிழர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 168 தொகுதிகளில் அ.தி.மு.க. தனியாக களம் காண உள்ளது.