திமுகவின் 2026-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா செப்டம்பர் 15 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

திராவிட இயக்க வளர்ச்சி மற்றும் கட்சிப் பணிகளில் நீண்டகால பங்களிப்பு வழங்கிய மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் ஆறு விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெரியார் விருது — விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா

அண்ணா விருது — சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்

கலைஞர் விருது — திமுக துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா

பாவேந்தர் விருது — மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு

பேராசிரியர் விருது — தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி

மு.க.ஸ்டாலின் விருது — இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

முப்பெரும் விழா, திமுகவின் வரலாறு மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமின்றி, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் மேடையாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.