
ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IMD வெளியிட்ட தகவலின்படி, Garhwa, Palamu, Latehar, Lohardaga, Gumla, Khunti, Saraikela-Kharsawan, West Singhbhum, East Singhbhum மற்றும் Simdega மாவட்டங்களில் சில நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு flash-flood risk உள்ளது.
செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையில் East Singhbhum மாவட்டத்தின் Dumaria பகுதியில் 217 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. Giridih-ன் Dumri பகுதியில் 162.2 மி.மீ. மற்றும் Latehar-ன் Mahuadawar பகுதியில் 146.2 மி.மீ. மழை பதிவானதாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள், சிறிய ஆறுகள், ஓடைகள் மற்றும் மலைச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், Garhwa, Palamu, Simdega மற்றும் West Singhbhum மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான red alert விடுக்கப்பட்டிருந்தது. Latehar, Lohardaga, Gumla, Khunti மற்றும் Saraikela-Kharsawan உள்ளிட்ட பகுதிகளுக்கு orange alert அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் வழியாக நகரும் என IMD தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் மாநிலத்தில் செப்டம்பர் 5 வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் பாலங்களை கடக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.