
இந்திய U20 ஆண்கள் கால்பந்து அணி நீண்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு AFC U20 Asian Cup பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற Group B தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியின் 25-வது நிமிடத்தில் Danny Meitei Laishram முதல் கோலை பதிவு செய்தார். 60-வது நிமிடத்தில் Vishal Yadav அசத்தலான கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய Md Arbash, 79-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து இந்தியாவின் 3-0 வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றது. இருப்பினும் இந்தியாவின் qualification, பின்னர் நடைபெற்ற Syria–Uzbekistan போட்டியின் முடிவையும் சார்ந்திருந்தது.
அந்த ஆட்டத்தில் Uzbekistan, Syria-வை 3-0 என வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் AFC U20 Asian Cup தகுதி உறுதியானது. Group B-ல் Uzbekistan 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, இந்தியா 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பெற்றது.
AFC விதிமுறைகளின்படி, எட்டு குழுக்களில் இரண்டாம் இடம் பிடித்த சிறந்த ஏழு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும். இந்தியா அந்த அணிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இந்தியா கடைசியாக 2006-ல் AFC U20 Asian Cup-ல் விளையாடியது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நீண்ட இடைவெளி முடிவுக்கு வந்துள்ளது.
AFC U20 Asian Cup China 2027 போட்டி 2027 மார்ச் 24 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற உள்ளது என்று Daily Thanthi தெரிவித்துள்ளது.